×

சிங்கப்பூர் தேர்தல் ஆளுங்கட்சி வெற்றி: 14வது முறையாக ஆட்சியை பிடித்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மாதிரி வாக்கு எண்ணிக்கையில் ஆளும் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. சிங்கப்பூரில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 97 தொகுதிகளில் ஆளும் மக்கள் செயல்கட்சி போட்டியின்றி 5 இடங்களை கைப்பற்றியிருந்தது. இதனால் எஞ்சிய இடங்களுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு நடந்தது. இதில், 60 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்யும் மக்கள் செயல் கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி போட்டியிட்டது.

ஆளும் மக்கள் செயல்கட்சி 87 இடங்களில் போட்டியிட்டது. மொத்தம் 27.6 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மாலை 5 மணி வரை 82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்து தோரயமாக 100 வாக்குகள் எண்ணும் மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இதில் ஆளும் மக்கள் செயல் கட்சி 82 இடங்களை பெற்று அமோக வெற்றியை உறுதி செய்தது. எனவே முழுமையான வாக்கு எண்ணிக்கையிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்கு முன் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங்க் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார். மக்கள் செயல் கட்சியின் தொடர்ச்சியான 14வது வெற்றி இது.

The post சிங்கப்பூர் தேர்தல் ஆளுங்கட்சி வெற்றி: 14வது முறையாக ஆட்சியை பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Singapore ,ruling ,People's Action Party ,Singapore general election ,Dinakaran ,
× RELATED ஏமனில் சவுதி குண்டு மழை: 7 பேர் பலி