- பாக்கிஸ்தான்
- பெஷாவர்
- தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்
- TTP
- பிபக் கர்
- வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டம்
- தின மலர்
பெஷாவர்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 41 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். வடக்கு வஸீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே நேற்று முன்தினம் இரவு தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சித்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்த்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது பற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்படவில்லை.
The post பாகிஸ்தானில் 41 தீவிரவாதிகள் சுட்டு கொலை appeared first on Dinakaran.
