×

11 ஆண்டுகால திருமண பந்தம் முறிந்தது; கள்ளக்காதல் உறவால் ‘யூடியூப்’ ஜோடி பிரிவு

வாஷிங்டன்: பிரபல இணைய ஜோடி விவாகரத்து கோரிய நிலையில், மனைவியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு கணவர் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.அமெரிக்காவில் ‘தி ஸ்காட்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக வலம் வந்த டெஸ்மண்ட் ஸ்காட் மற்றும் கிறிஸ்டி சாரா ஸ்காட் ஜோடி, தங்களது 14 வயதிலிருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 11 ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர். இவர்களுக்கு வான்ஸ் மற்றும் வெஸ்டின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மிகச் சிறந்த தம்பதிகளாகக் கொண்டாடப்பட்ட நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் கிறிஸ்டி சாரா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது கணவரின் கள்ளக்காதல் உறவே பிரிவுக்குக் காரணம் என்றும், இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று டெஸ்மண்ட் ஸ்காட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் நாங்கள் பிரிய நினைத்தோம். அப்போது நான் செய்த சில தவறுகளுக்காக இப்போது வருந்துகிறேன். விவாகரத்து முடிவை எடுப்பதற்கு முன்பே இதுபற்றி கிறிஸ்டியிடம் கூறிவிட்டேன்’ என்று மறைமுகமாகத் தனது தவறான நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தைகள் நலனில் இருவரும் தொடர்ந்து அக்கறை காட்டுவதாகவும், சமையல் தொடர்பான தனது பயணத்தைத் தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : YouTube ,Washington ,Desmond Scott ,Scotts' ,US ,
× RELATED அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்;...