- இந்திய கடற்படை
- புது தில்லி
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
- ஜம்மு
- காஷ்மீர்
- தின மலர்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டும் நிலையில், இந்திய கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இந்திய போர்க்கப்பல்கள் எதிரிநாட்டுக்கு சொந்தமானதாக சித்தரிக்கப்பட்ட இலக்கை நீண்ட தூரத்தில் இருந்து ஏவுகணைகளை வீசி அழித்ததாக கடற்படை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போர் ஒத்திகைக்கான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ள கடற்படை செய்தி தொடர்பாளர், ‘‘நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படியும் போர் தயார் நிலையில், நம்பகமானதாகவும், எதிர்காலத்திலும் தயாராக உள்ளது’’ என்றார்.
The post இந்திய கடற்படை போர் ஒத்திகை appeared first on Dinakaran.
