டீ கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி தேவை: சங்க ஆண்டு விழாவில் தீர்மானம்

மதுரை, ஏப். 26: மதுரை காபி – டீ வர்த்தகர்கள் சங்கத்தின் ஆண்டு விழாவை சங்க தலைவர் சுகுமாறன் துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் முகம்மது முகையதீன் தலைமை வகித்தார். பொருளாளர் சேகர் வரவேற்றார். வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், உணவு பாதுகாப்பு சட்டப்படி பதிவு செய்யக்கூடிய அடிப்படை பதிவிற்கான உச்சவரம்பை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும். தொழிலாளர் நலத்துறையும், உயர் நீதிமன்றமும் 24 மணி நேரம் உணவு மற்றும் டீ கடைகள் திறந்திருக்க அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் சில இடங்களில் இரவு 12 மணிக்கே கடைகளை அடைக்கச்சொல்லி காவல்துறை நிர்ப்பந்திக்கிறது. இதை தவிர்த்து தடையில்லாமல் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க காவல்துறை அனுமதிக்க வேண்டும். தேநீர் கடைகளுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். தேயிலை, காபி தூள், பால், காஸ் சிலிண்டர், எண்ணெய் மற்றும் மாவு வகைகளின் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும். சில்லரை நாணயங்களை வங்கிகள் வழங்க வேண்டும். மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக செயல் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் மாரிக்கனி நன்றி கூறினார்.

The post டீ கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி தேவை: சங்க ஆண்டு விழாவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: