ஐபிஎல் போட்டியில் இன்று முதலிடத்துக்கு டெல்லியுடன் முட்டி மோதும் லக்னோ

* ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் 40வது லீக் போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ளது.

* இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு
நேர் களம் கண்டுள்ளன.

* நடப்புத் தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ 5 வெற்றிகளையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது.

* இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி இருக்கும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லிக்கு 5 வெற்றி, 2 தோல்விகள் கிடைத்துள்ளன.

* இரு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெல்லும் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும்.

* இன்றைய ஆட்டம் லக்னோவுக்கு 9வது, டெல்லிக்கு 8வது லீக் போட்டியாகும்.

* இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக டெல்லி 211, லக்னோ 209 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 167, டெல்லி 143 ரன் எடுத்துள்ளன.

* அவற்றில் இரு அணிகளும் தலா 3 வெற்றி, தோல்விகளை கண்டுள்ளன.

The post ஐபிஎல் போட்டியில் இன்று முதலிடத்துக்கு டெல்லியுடன் முட்டி மோதும் லக்னோ appeared first on Dinakaran.

Related Stories: