குஜாம்பிகை சமேத அரம்பேஸ்வரர்

ஜோதிடம் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது ராசி மண்டலங்கள்தான். இந்த ராசி மண்டலத்தின் அடிப்படையில் இப்புவியில் ஆற்றல் மையங்களாக கோயில்களும் கோயில்களுக்குள் தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. அந்த ஆற்றல் சக்திக்குள் நாம் பிரவேசிக்கும் பொழுது மாற்றத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது. இந்த மாற்றத்தில் திருத்தலங்களின் அமைப்பும் அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றமும் ஆச்சர்யங்கள்தான்… திரிபுர சம்ஹாரத்தின் போது சிவபெருமான் செல்லும் பொழுது அவருடன் சென்ற தேவர்கள் விநாயகப் பெருமானை வழிபடாமல் சென்றதால் தேரின் அச்சு முறிந்தது. அப்போது சிவபெருமானின் கழுத்திலிருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. அந்த மாலை விழுந்த இடத்தில்தான் சிவபெருமான் சுயம்பாக எழுந்தருளியுள்ளார். தேவர்கள் இங்கு வந்து வழிபட்டதால் தெய்வநாயகீஸ்வராக அருள்பாலிக்கிறார். தேவலோகத்தில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்களின் அழகை இழந்து வருந்த தேவகுருவான பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி தெய்வநாயகீஸ்வரரை 48 நாட்கள் வழிபட்டு இழந்த அழகை தேவலோக ரம்பையார் பெற்றதால் அரம்பேஸ்வரர் என்ற பெயர் நிலைத்தது.

தக்‌ஷணின் சாபத்திலிருந்து மீள சந்திரன் இத்தலத்தில் வழிபட்டு சிவபெருமானின் சிரசில் பிறையாக இடம்பெற்றான் என்ற சிறப்பும் உண்டு.எலுமியன் கோட்டூர் தெய்வநாய கேஸ்வரர் திருஞான சம்பந்தரை குழந்தை வடிவிலும் முனிவர் வடிவிலும் வழிமறித்துள்ளார். அதனை சம்பந்தருடன் வந்த அடியார்கள் உணரவில்லை. வெள்ளை பசு வடிவம் எடுத்து கோயிலுக்குள் சென்று மறைந்தார். சம்பந்தர் அந்த பசுவை தொடர்ந்து வந்தார் இத்தலத்திற்கு வந்து மறைந்த பின்புதான் வந்தது சிவபெருமான் என சம்பந்தர் மனமுருகிப் பதிகம் பாடினார்.இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கும் சுவாமிக்கும் பெயர் தர வந்தமர்ந்த கிரகங்கள் சூரியன், சனி, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியனவாகும்.

* மேஷ ராசியில் பிறந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து ரோகிணி நட்சத்திரத்தன்று சந்திர தீர்த்தம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த தீரத்தத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டில் வைத்தால் குபேர அருள்பாலித்து குபேர சம்பத்தை அருளச் செய்வான். மேலும், மேஷ ராசிக்காரர்கள் இத்தலத்தில் கொண்டைக் கடலையை நெய்வேத்தியம் செய்து கருப்புநிற பசுவிற்கு உணவு கொடுத்தால் குபேரன் அகம் மகிழ்ந்து அருள் புரிந்து உடன் வருவான்.
* மேஷ லக்னத்திற்கு ஐந்தாம் (5ம்) பாவகத்திலோ அல்லது ஒன்பதாம் (9ம்) பாவகத்திலோ சூரியன், புதன் இணைவு இருந்தால் அவர்கள் நடனம் பயில்வதற்கான பாக்கியம் உண்டாகும் அவர்கள் இத்தலத்தில் ஏகாதசி திதி அன்று சுவாமிக்கு பச்சைபயிறை நெய்வேத்தியமாக கொடுத்து பின்பு பச்சைபயிறை தானம் செய்தால் நடனக் கலையில் மிகுந்த தேர்ச்சி பெறுவர்.
* ரிஷப ராசிக்காரர்கள் நவதானியத்தை கோயிலில் உள்ள விதைத்து வந்தால் வீட்டில் செல்வம் பெருகி ஐஸ்வர்யம் உண்டாகும்.
* ரிஷப லக்னகாரர்கள் இக்கோயிலில் வழிபட்டு கருப்பு நிற பசுவிற்கு உணவு தானம் செய்தால் சனி பகவானின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். பௌர்ணமி அன்று தங்கி வழிபட்டு வந்தால் சுகம் பெறுவர்.
* மேஷ ராசியினர் மருத்துவத்திலும் அரசியலிலும் உள்ளவர்கள் இத்தலம் மிகப்பெரிய மாற்றத்தை தரும் என்று சொன்னால் அது குறைவே. அதை என்னற்ற எதிர்பாராத அமைப்பை தரும்.
* தோல் தொடர்பான நோய், தொழுநோய் உள்ளவர்கள் இத்தலத்தில் அனுஷ நட்சத்திரத்தன்று தொடர்ந்து 48 நாட்கள் வழிபட்டு கருப்புநிற பசுவிற்கு உணவு கொடுத்தால் நோய் விலகும்.

The post குஜாம்பிகை சமேத அரம்பேஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: