அப்போது தடைசெய்யப்பட்ட பொருட்களை மலைக்கு எடுத்து செல்வதை தடுக்க வனத்துறையினர் மலை அடிவாரத்தில் தீவிரமாக சோதனை செய்கின்றனர். அப்போது போதை பொருட்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழிக்கின்றனர். இந்நிலையில் பர்வத மலையேறி செல்லும் இளைஞர்கள் கூட்டத்தில் ஒரு வாலிபர் போதை பொருளை மறைத்து சென்று பயன்படுத்தும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: பர்வதமலைக்கு வருபவர்களை வனத்துறையினர் சோதனை செய்தாலும் அதனை மீறி சிலர் போதைப்பொருட்களை கொண்டு சென்று பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. வீடியோவில் இருப்பவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஏனெனில் அங்குள்ள சிவாலயங்களில் சில போதைப்பொருட்களை பக்தர்கள் சுவாமிக்கு வைத்து படைப்பார்களாம். அதேபோல் இங்கும் வைப்பார்கள் என கொண்டு வந்திருக்கலாம். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையாக உள்ளது. இதை தடுக்க வனத்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கலசப்பாக்கம் அருகே உள்ள பர்வதமலையில் போதை பொருள் பயன்படுத்திய மர்ம ஆசாமி: வீடியோ வைரலால் பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.