காரிமங்கலம், ஏப்.17: காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் குறித்து மண்டல அலுவலரும், கலெக்டர் நேர்முக உதவியாளருமான (பஞ்சாயத்து) வேடியப்பன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலைஞர் வீட்டு வசதி திட்ட பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள், குடிநீர் சாலை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், அனைத்து ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் குறித்து, செயலாளர்கள் கண்காணித்து, முறைகேடான குடிநீர் இணைப்புகளை துண்டித்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், நீலமேகம் மற்றும் இன்ஜினியர்கள், துணை பிடிஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.
