காலை உணவுத் திட்டத்தில் பொங்கல், சாம்பார்
அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் பேரவையில் தகவல் தெரிவித்தார். காலை உணவு திட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர் .சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம் ரூ.61 கோடியாக உயர்த்தப்படும்.
திருநங்கைகளுக்கு சென்னை, மதுரையில் தங்கும் மையம்
சென்னை, மதுரையில் திருநங்கைகளுக்கு அரண் என்னும் தங்கும் மையம் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள், புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டம் – ரூ.721 கோடி செலவு
புதுமைப் பெண் திட்டத்துக்கு இதுவரை ரூ.721 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
The post வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டத்தில் பொங்கல், சாம்பார் வழங்கப்பட உள்ளது: அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு appeared first on Dinakaran.