சென்னை: சென்னை, புறநகர் பகுதியில் திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் தரையிறங்க வந்த மேலும் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள், வானில் வட்டம் அடித்து தத்தளிக்கிறது.