அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடங்கியது

ஜம்மு: அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்தனர். ஆண்டுதோறும் இமயமலையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான அமர்நாத் யாத்திரை நடைபெறுகின்றது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையான ஆகஸ்ட் 9ம் தேதி யாத்திரை நிறைவடையும். இந்நிலையில் யாத்திரைக்கான நேரடி முன்பதிவு நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் 540 வங்கி கிளைகளில் முன்பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஅமர்நாத் ஆலய வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் அதன் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு நேற்று முன்தினம் காலை தொடங்கியது.

The post அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: