இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, தேர்தல் கூட்டணியும் உடைந்தது. இதனால் கடந்த மக்களவை தேர்தலின்போது, தமிழகத்தில் பாஜவுக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியை விரும்பிய பாஜ தலைமை அண்மையில், அதிமுக தலைவர் எடப்பாடியை டெல்லி அழைத்து பேச்சுநடத்தியது. அப்போது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக பாஜ தலைவர் மாற்றப்பட போகிறார் என்ற தகவல் வெளியானது.
வரும் சட்டப்பேரவை தேர்தல் வரை என்னை பாஜ தலைவராக நியமிக்க வேண்டும் அண்ணாமலை டெல்லி மேலிடத்திடம் கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தலைவரை நியமிக்கும் படலம் தொடங்கியது. தொடர்ந்து கடந்த தமிழக பாஜ தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது. பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருக்கு முக்கிய தலைவர்கள் பத்து பேர் மனுவை முன்மொழிந்திருந்தனர். அவர் ஒருவர் மட்டுமே விருப்பமனு அளித்த நிலையில் தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானார்.
இதையடுத்து முறைப்படி கடந்த சனிக்கிழமை சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவராக முறைப்படி நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று கொண்டார். நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அதே நேரத்தில் அண்ணாமலையின் பணிகள் பாராட்டுக்குரியது. அவருக்கு கட்சி மேலிடம் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கும் என்று சென்னை வந்திருந்த அமித்ஷா தெரிவித்தார். ஆனால், கடைசி நேரத்தில் பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.
அதுவும் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களில் அண்ணாமலையும் ஒருவர் என்ற அளவில் தான் அவருக்கு பதவி வழங்கப்பட்டது. இதனால், அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவருடைய ஆதரவாளர்களும் கடும் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை நேற்று திடீரென சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற அண்ணாமலை பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், அவர் டெல்லியில் தலைவர்களை சந்திக்கவில்லை. டெல்லி சென்ற அவர் அங்கிருந்து உத்தரகாண்ட் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இயமலைக்கு சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இமயமலை சென்றுள்ள அவர் ஒரு வாரம் அங்கிருந்து ஆன்மிக பயணம் மேற்கொள்ள உள்ளார். அதே நேரத்தில் அவர் மன அமைதிக்காக அவர் இமயமலை சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இமயமலை பயணத்திற்கு பிறகே அவரது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
* இமயமலை சென்றுள்ள அவர் ஒரு வாரம் அங்கிருந்து ஆன்மிக பயணம் மேற்கொள்ள உள்ளார். அதே நேரத்தில் அவர் மன அமைதிக்காக அவர் இமயமலை சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது
The post தமிழக பாஜ தலைவர் பதவி பறிப்பு எதிரொலி நிம்மதி தேடி அண்ணாமலை இமயமலை பயணம்? appeared first on Dinakaran.