மதுரை, ஏப். 12: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் நேற்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14ம் தேதி ஆண்டு தோறும் சமத்துவ நாளாக கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் நேற்று ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல் அந்தந்த மண்டலங்களில் உதவி ஆணையாளர்கள் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேயர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (பணி) அருணாச்சலம், கணக்கு அலுவலர் (பொது) பாலாஜி, கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.
