மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,310 புள்ளிகள் உயர்ந்து 75,157 புள்ளிகளானது. நண்பகல் வர்த்தகத்தின்போது 1,620 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,310 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.