25 மொழிகளை சரளமாக பேசுமாம்… ராமேஸ்வரம் பள்ளியில் ஏ.ஐ. ஆசிரியை அறிமுகம்


ராமேஸ்வரம்: `ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்’ (ஏ.ஐ.) எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உலகளவில் பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறது. கணினி தொழில்நுட்பத்தின் கொடையான ஏ.ஐ. பல்வேறு பரிணாமங்களை நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோ ஆசிரியை நேற்று அறிமுகம் செய்யப்பட்டார். இந்த ரோபோ முன் மாணவர்கள் வரிசையாக நின்று, பல்வேறு பாடங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு ஏ.ஐ. ரோபோ சளைக்காமல் பதில் அளித்தது.

மேலும், மாணவர்களுக்கு பாட திட்டங்களை கற்பிப்பதுடன், அவர்களுடன் கைகொடுத்து இயல்பாக உரையாடுவதும் குறிப்பிடத்தக்கது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு உரையாடி மகிழ்ந்தனர். ரோபோவின் கீழ் பகுதியில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்ந்து செல்ல முடியும். இது குறித்து பள்ளி தரப்பில் கூறியதாவது: மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஐ ஆசிரியை மாணவர்கள் எழுப்பும் கேள்விகளை `சர்ச் என்ஜின்’ உதவியுடன் எதிர்கொண்டு பதில் அளிக்கிறது. இந்த ரோபோவால் 25 இந்திய மொழிகள் மற்றும் 25 சர்வதேச மொழிகளில் சரளமாக பேச முடியும்’ என்று தெரிவித்தனர்.

The post 25 மொழிகளை சரளமாக பேசுமாம்… ராமேஸ்வரம் பள்ளியில் ஏ.ஐ. ஆசிரியை அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: