தூத்துக்குடி, ஏப். 10: தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரநாயக்கன்தட்டு, முடுக்குகாடு ஆகிய இடங்களில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
இப்பகுதி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் வசதிக்காக உப்பளங்கள் வழியாக புதிய தார் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்படும். ஊருக்குள் சேதமான சாலைகள் விரைவாக சீரமைத்து தரப்படும். இங்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவு போட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. வீட்டு தீர்வை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, முன்புபோல நீங்கள் தண்ணீரை சுமந்து கஷ்டப்பட வேண்டியது இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றார்.
இதில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசுவாமி, திமுக பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், வட்ட செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முடுக்குகாடு நிர்வாகிகள் கண்ணன், ராஜா, வட்ட பிரதிநிதி செந்தில், வீரநாயக்கன்தட்டு நிர்வாகிகள் கணேசன், மகளிர் தொண்டர் அணி முத்துலட்சுமி, முருகப்பெருமாள், நேசமலர் ஊர் தலைவர் சந்தனகுமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post வீரநாயக்கன்தட்டு, முடுக்குகாடு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.