புதுக்கோட்டை, ஏப்.10: புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பு வந்துள்ளது. பல இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஒன்றிய அரசை கண்டித்தும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பாக திலகர் திடலில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்.செங்கோடன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் துணைச் செயலாளர் தர்மராஜன், பொருளாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதுக்கோட்டையில் இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
