இரண்டாவது நாளாக கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்

சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. விவாத்திற்கு பிறகு அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவை நிகழ்வின்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

மேலும் மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில், 2வது நாளாக நேற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூறுகையில் “ அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிப்பதில்லை. அதை கண்டிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளோம். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றனர்.

The post இரண்டாவது நாளாக கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Related Stories: