திருச்செங்கோடு, ஏப்.9: திருச்செங்கோடு புறநகர் போலீசார், கடந்த 2007ல் நடந்த குற்ற வழக்கில், மல்லசமுத்திரம் ஒன்றியம், துத்திப்பாளையம் அத்திக்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் ரவி (எ) ரவிக்குமார் என்பவரை தேடி வந்தனர். அவர் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அவரை திருச்செங்கோடு குற்றவியல் நீதித்துறை நடுவர், மார்ச் 10ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். ஆனால், அவர் இதுவரை நீதிமன்றத்திலோ, காவல் நிலையத்திலோ ஆஜராகவில்லை. அவரை நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இதேபோல், 2022ல் நடந்த குற்ற வழக்கில், திருச்செங்கோடு சீதாராம்பாளையம் முனியப்பன் கோவில் தோட்டம் கார்த்திக் மனைவி மகாலட்சுமி சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் தேடி வந்தனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து, 2025 பிப்ரவரி மாதத்துக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த இருவர் பற்றிய விவரம் தெரிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், சன்மானம் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post பெண் உள்பட 2 பேர் தலைமறைவு குற்றவாளிகள் appeared first on Dinakaran.