மேலும், பூலாம்பட்டி, தாதாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. தாதாபுரம் ஊராட்சி வட்டக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 800க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் சேதமானது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அழகர்நாயக்கன்பட்டியில் பலத்த காற்றுக்கு தெருக்களில் இருந்த 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததில், வீடுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சேதமடைந்ததால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமமக்கள் அவதி அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரவு நேரத்தில் மின்கம்பம் விழுந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பிற்பகல் முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 83 மி.மீ மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30.2 அடியாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மையமான களக்காடு தலையணையில் நேற்று அதிகாலை நீர்வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
The post சேலம், திண்டுக்கல், குமரியில் மழை; வாழை மரங்கள் முறிந்தது: மின்கம்பம் சாய்ந்து வீடுகள் சேதம் appeared first on Dinakaran.