கோடை சீசனை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்

குன்னூர் : கோடை சீசனை முன்னிட்டு சிம்ஸ் பூங்காவை பொலிவு படுத்தும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றது.

ஆண்டுதோறும் மே மாதத்தின் இறுதி வாரத்தில் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சீசன் நாட்களை தவிர தினமும் 500 முதல் 3,500 சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

இதனிடையே இந்த ஆண்டு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து பூங்காவை பார்வையிடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் தோட்டக்கலைத்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோடை சீசன் நெருங்கியதையடுத்து பூங்காவிற்குள் உள்ள தடுப்பு வேலிகள், நடைபாதைகள், கைப்பிடிகள் போன்றவற்றில் வர்ணம் பூசப்பட்டு பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் மார்ச் மாதத்தில் நடவு செய்யப்பட்ட நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

The post கோடை சீசனை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவை பொலிவுபடுத்தும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: