கோவில்பட்டி, மார்ச் 30: கோவில்பட்டி அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 13.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ரேஷன் கடையை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார். கோவில்பட்டி அருகே கயத்தார் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனார்ஊத்து கிராமத்தில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் நிதியிலிருந்து ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
கயத்தார் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தேமுதிக கட்சியைச் சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், ஓன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் பாலகணேசன், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் முத்துப்பட்டன், அய்யனார் ஊத்து கிளைச்செயலாளர் ராஜேந்திரன், உசிலாங்குளம் கிளைச்செயலாளர் அய்யாத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post அய்யனார்ஊத்து கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.
