ராசமிராசுதார் மருத்துவமனையில் தெரு நாய்களால் நோயாளிகள் அச்சம்

 

தஞ்சாவூர், மார்ச்29: தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே நூறாண்டுகள் பழமையான இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துமனையில் மகப்பேறு சிகிச்சை, தாய் சேய் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, நாய்கடிக்கான சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

மகப்பேறு சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுவதால், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதே போல் ஏராளமான உள்நோயாகளிகளும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் ஆங்காங்கே உலா வருகிறது. சில நேரங்களில் பொதுமக்கள் நாய்களை விரட்டினால், அவை கடிக்க வருவதால் நோயாளிகள் அச்சமடைகின்றனர். பொதுமக்களையும் நோயாளிகளையும் அச்சுறுத்தும் வகையில் உலா வரும் நாய்களை பிடித்து மாதாக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராசமிராசுதார் மருத்துவமனையில் தெரு நாய்களால் நோயாளிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: