அருப்புக்கோட்டை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மண்டப சாலை, கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(45). இவர் தற்போது சிலுக்கப்பட்டியில் கிராம உதவியாளராக இருந்து வருகிறார். இவரது மகன் கவின்குமார், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 10ம் வகுப்பை நிறைவு செய்ய விரும்பிய செந்தில்குமார், தனது மகனுடன் தேர்வுக்கு தயாராகி வந்தார். நேற்று செந்தில்குமார் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் தனித்தேர்வராக தேர்வு எழுதினார். இதேபோல் தான் படிக்கும் தனியார் பள்ளியில் கவின்குமார் தேர்வு எழுதினார். மகனுடன் தந்தையும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதை பலரும் பாராட்டினர்.
The post 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை, மகன் appeared first on Dinakaran.