புதுக்கோட்டை, மார்ச் 28: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் நிஜாம் குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் ராஜா (38). இவர் கடந்த 4 மாதங்களாக ஓசூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூரை அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். 4 மாத பணி முடிந்து ஊர் திரும்பிய அவரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக பதிவு எண்ணைக் கொண்ட காரில் வந்த நபர்கள் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக அவரது மனைவி பானு, மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரைத் தொடர்ந்து பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஓம்கார் (30) என்பவரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். கடத்தப்பட்ட ராஜாவை போலீசார் மீட்டனர்.
The post தொழிலாளியை கடத்திய ஒசூர் வாலிபர் கைது appeared first on Dinakaran.
