ராமநாதபுரம், மார்ச் 28: ராமநாதபுரத்தில் எரிவாயு மூலம் இயங்கும் ஆட்டோ, திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. ராமநாதபுரம் வாணியங்குளத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு புதிதாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் புதிய ஆட்டோவை வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஆட்டோவை ராாமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு மெக்கானிக் ஒர்க்ஷாப்பில், சில பாகங்கள் மாட்டுவதற்காக விட்டுள்ளார். இந்நிலையில் அன்றிரவு திடீரென அந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்து எலும்புக் கூடாக காட்சி அளித்தது. இதுகுறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஆட்டோ தீப்பிடித்து நாசம் appeared first on Dinakaran.
