முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சிவகங்கை, மார்ச் 28: காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்தவர் சேகர் (61). பெயின்டர். இவர் கடந்த 31.12.2016 அன்று 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வழக்கு பதிந்த சாக்கோட்டை போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்

The post முதியவருக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: