பங்குனி செவ்வாய் திருவிழா

தேவகோட்டை, மார்ச் 26: தேவகோட்டை வெள்ளையன் ஊரணி பகுதியில்  சமயபுர மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி செவ்வாய் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா தொடங்கப்பட்டது. தினந்தோறும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று ஊரணி பிள்ளையார் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, மயில் காவடி, பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post பங்குனி செவ்வாய் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: