ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராசாம்பாளையத்தில் நாய்கள் கடித்துக் குதறியதில் 4 ஆடுகள் உயிரிழந்தது. செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்த நாய்கள், ஆடுகளை கடித்துக் குதறின. 25 ஆடுகள் பட்டியில் இருந்த நிலையில் 4 ஆடுகள் உயிரிழப்பு- 5 ஆடுகள் காயம், 2 ஆடுகளை காணவில்லை. இதே பகுதியில் ராமசாமி என்பவரின் பட்டியிலும் ஒரு ஆட்டை நாய்கள் கொன்றுள்ளன .
The post ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
