வக்பு மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் என்.அல் அமீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: வக்பு வாரிய திருத்த மசோதா எனும் பெயரில் ஆளும் ஒன்றிய பாஜ அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டி, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதை சட்டமாக்க உள்ளது.

இதை கண்டித்தும், அம்மசோதாவை திரும்பபெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் (27ம் தேதி) மாலை 4.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநிலப்பொதுச்செயலாளர் ஏ. முஜிபுர் ரஹ்மான் கண்டன உரையாற்ற உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post வக்பு மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: