தஞ்சாவூர், மார்ச்24: தேவங்குடி ஆற்றின் கரையில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமதுஇப்ராஹிம் மற்றும் விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் வீரமாங்குடி ஊராட்சி தேவங்குடி கிராமத்தில் ஆற்றின் கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கி உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் சுகாதார கேடு ஏற்பட்டு கொள்ளிட தண்ணீர் மாசுபடும் ஏற்படும் அபாயம் உள்ளது. விளைநிலங்களில் பயிரிட முடியாத சூழல் உருவாகும். நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே தேவங்குடி ஆற்றின் கரையில் அமைக்க உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேவங்குடி ஆற்றின் கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது appeared first on Dinakaran.