சென்னை: ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி அனிதா மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.