- மலைகள்
- திருப்பதி தேவஸ்தானம்
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- நாரா.லோகேஷ்
- அமைச்சர்
- தேவன்ஷின்
- இறைவன்
திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா.லோகேஷ். இவர் தற்போதைய அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவரது மகன் தேவன்ஷின்(8). ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளுக்கு குடும்பத்தினர் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் நேற்று பேரனின் பிறந்த நாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்துடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வந்தார். நேற்று காலை சேவையில் முதல்வர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சுவாமி தரிசனம் முடித்தவுடன் அவர்களுக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். தொடர்ந்து அன்னதான சத்திரத்திற்கு சென்ற முதல்வர், தனது குடும்பத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது.
ஆனால் மலை அடிவாரத்தில் மும்தாஜ் ஹோட்டல் கட்டுவதற்கு, தேவலோகம் என மூன்று நிறுவனங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் மாற்றினாலும் மலை அடிவாரத்தில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவே மலை அடிவாரத்தில் மலையை ஒட்டி 3 நிறுவனங்களுக்கு 35.27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து, அவை தேவஸ்தானத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம் 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் ரத்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி appeared first on Dinakaran.
