தாம்பரம்: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில், சென்னை புறநகரின் தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், தாம்பரம் சட்டமன்றத் தொகுதிகள் வளர்ந்து வரும் பகுதிகளாக உள்ளன. இங்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில்தான் அதிகளவில் மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன. எனினும், தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதி பிரதான சாலைகளில் மினி பேருந்துகள் இயக்கப்படுவது குறைவாக உள்ளது. இப்பகுதிகளில் மினி பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுமா என்று தமிழக முதல்வரிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளேன். இதன்படி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சியில் வளர்ந்து வரும் நகரப் பகுதிகளில் சில இடங்கள் மிகவும் குறுகலாக உள்ளது. எனினும், அங்கு புதிய மினி பேருந்துகளை விடவேண்டும் என்று தொடர் கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதிகளில் மினி பேருந்துகளைவிட மிகச் சிறிய வாகனங்களை இயக்கினால்கூட அப்பகுதி மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்ற ஆலோசனைகளும் வருகின்றன.
இதுபற்றி விரைவில் ஆலோசித்து, நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படுமா?… இ.கருணாநிதி எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.