சென்னை: வார விடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. 21, 22, 23ம் தேதிகளில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 21ம் தேதி கிளாம்பாக்கத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல 270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.