இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கோயில் குளத்தை தூர்வாரி சுற்றிலும் நடை பயிற்சி பாதை, ஸ்டீல் கைப்பிடி, விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், அழகிய பூச் செடிகள் மற்றும் அலங்கார விளக்குகள், இருக்கைகள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு மழைநீர் சேமிப்புகாக குளத்திற்குள்ளே கிணறு போன்று அமைக்கப்படுகிறது.இந்த நிலையில், குளத்தை கவுன்சிலர் சந்திரன் தலைமையில், உதவி பொறியாளர் குமார், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்களுக்கு பயன்படும் வகையில் குளத்தில் மினி படகு சேவையை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல், மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள மாநகராட்சி ஆவின் குளத்தை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் குளத்தை சீரமைக்க ரூ1.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்துக்கு நடுவே உள்ள பனை மரங்களை அப்புறப்படுத்தாமல் குளத்தை சுற்றிலும் 20 அடி ஆழத்திற்கு தூர்வாரி, கருங்கல் ஜல்லிகள் மூலம் கரை அமைத்து நடைபாதை, செடி, கொடிகளுடன் அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
The post மாதவரத்தில் ரூ.1.90 கோடி செலவில் மாநகராட்சி குளம் சீரமைப்பு: படகு சவாரிக்கு கோரிக்கை appeared first on Dinakaran.