×

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி அறிவிப்பு

தஞ்சாவூர், மார்ச்20: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான தற்காலிக பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரண வலி தணிப்பு சிகிச்சைப் பிரிவில் 2 தற்காலிக பணியிடங்கள் ரிநரப்பப்பட உள்ளன. இதற்கு 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடமாகும். இந்த பணி 11 மாதங்களுக்கு மட்டுமே. இந்த பணியிடம் பணிவரன்முறை செய்யப்படவோ, நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. உரிய கல்வித்தகுதி உடைய விருப்பமுள்ளவர்கள், உரிய கல்விச்சான்றுகளுடன் முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் என்று முகவரியிட்டு விண்ணப்பிகலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.04.2025. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு தஞ்சை மருத்துவக் கல்லூரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Medical College ,Thanjavur ,Thanjavur Medical College Hospital… ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...