×

நூறுநாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மாற்றம் காங்கிரசார் உண்ணாவிரதம்

ராமநாதபுரம், ஜன.12:நூறு நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு வளர்ச்சியடைந்த பாரதம் என பெயர் மாற்றி உள்ளது. காந்தியின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்ட ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதனையடுத்து நேற்று ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரண்மனை முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.

இதில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட விதம், நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களான கிராமப்புற ஏழை,எளிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டு, ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தேவேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதிபாலன், மகிளா காங்கிரஸ் ராமலெட்சுமி மற்றும் வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Congress ,Gandhi ,Ramanathapuram ,Union government ,India… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை