திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அய்யாசாமி காலணி பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வரும் மாற்றுத் திறனாளியை தாக்கிய பாஜக உள்ளாட்சி மேம்பாடு பிரிவு நகரச் செயலாளர் செல்வகுமார் (40) கைது செய்யப்பட்டார். இறைச்சிக் கடை இருப்பதால் சாலையில் அப்பகுதியில் செல்லும் போது நாய் துரத்துவதாகக் கூறி தகராறு செய்ததுடன், கல்லை எறிந்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.
The post மாற்றுத் திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.