நெல்லை, மார்ச் 18: நெல்லை கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை புதுப்பித்து வழங்கவும், புதிய அட்டை வழங்கவும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து வருகிற 25, 26ம் தேதிகளில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடக்கிறது.
முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து இலவச பேருந்து பயண அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் மார்ச் 25, 26ல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.
