- உத்தரகண்ட்
- பாஜக
- டெஹ்ராடூன்
- பாஜக அரசு
- முதல் அமைச்சர்
- புஷ்கர் சிங் தாமி
- உத்தரகண்ட் சட்டமன்றம்
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- நிதி அமைச்சர்
- பிரேம்சந்த் அகர்வால்
- அமைச்சர்
- தின மலர்
டேராடூன்: உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜ அரசு பதவியில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் நடந்த உத்தரகாண்ட் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருக்கும், நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வாலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, மலைஜாதியினரை இழிவுப்படும் வகையில் அமைச்சர் அகர்வால் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
The post உத்தரகாண்ட் பாஜ அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.
