×

இந்தி வேண்டாம் ஆனால்…. தமிழ்படத்தை இந்தியில் ரீலீஸ் செய்வது ஏன்? பவன்கல்யாண் கேள்வி

திருமலை: ஜனசேனா கட்சியின் 11 ஆண்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் பவன்கல்யாண் பேசியதாவது: ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பது அல்லது ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஆகிய இரண்டும் நமது நாட்டின் தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடிப்படை நோக்கத்தை அடைய உதவாது. தமிழ் திரைப்படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்ய அனுமதிக்கும் போது ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? பாலிவுட்டில் இருந்து பணம் வேண்டும், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள் – அது என்ன வகையான லாஜிக்?. மும்மொழி கொள்கையின் நோக்கம் மாணவர்களுக்கு பரந்த அளவிலான தேர்வை வழங்குவது, தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது மற்றும் நாட்டின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும்’ என்றார்.

The post இந்தி வேண்டாம் ஆனால்…. தமிழ்படத்தை இந்தியில் ரீலீஸ் செய்வது ஏன்? பவன்கல்யாண் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Deputy Chief Minister ,Jana Sena Party ,
× RELATED ஐபேக் நிறுவன ரெய்டு; உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு