×

குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

 

மதுக்கரை, மார்ச் 15: கோவை அடுத்த வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பேச்சியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள செந்தூர் ஜெயம் காலனி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மதியம், அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது.

இதைப்பார்த்த பொதுமக்கள் பாம்பை விரட்டியதால் அங்குள்ள புதருக்குள் புகுந்து கொண்டது. பின்னர், அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் புதருக்குள் பதுங்கியிருந்த பாம்பை நீண்ட போராட்டத்திற்குப்பின் பாம்பை பிடித்தனர். மேலும், குடியிருப்பை சுற்றியுள்ள புதர்களை அகற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

The post குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madukkarai ,Senthur Jayam Colony ,Pechiyamman Temple ,Ward 11 ,Vellalur Panchayat ,Coimbatore ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது