தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

 

தஞ்சாவூர், மார்ச்15: இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என மத்தியஅரசை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட, சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முரசொலி எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் வாசிம் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இளையராஜா, இளம் பேச்சாளர் ரகுநாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில சட்டதிருத்தக்குழு உறுப்பினர் இறைவன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் முகில்வேந்தன், உதயநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

The post தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: