மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

 

மயிலாடுதுறை,மார்ச் 15: மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளியப்பநல்லூர் ஊராட்சி தொடரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இறந்த தம்பதிகள் மதியழகன் வாசுகி ஆகியோரின் மகள் ஷீலா (21). இவர் பெரிய மடப்புரம் கிராமத்தில் உள்ள அக்கா காவ்யா என்பவரது வீட்டில் வசித்து வந்தார். ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் உள்ள தனியார் (மால்) சூப்பர் மார்க்கெட்டில் நான்கு வருடமாக ஷீலா வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூப்பர் மார்க்கெட்ட்டில் மின்சாரம் தாக்கி ஷீலா படுகாயமடைந்து விட்டதாகவும் செம்பனார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக உறவினர்களுக்கு நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது ஷீலா இறந்து விட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த செம்பனார்கோவில் போலீசார் ஷீலாவின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: