தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிரடி உயர்வை சந்தித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,960க்கு விற்பனையானது.
இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையையும் அடைந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை பவுன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குவோரை கதி கலங்க வைத்து இருந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்து நகை வாங்குவோரை மேலும் கலக்கமடைய செய்தது. அதாவது நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.65,840க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் மீண்டும் நேற்று மாலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை 2வது முறையாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,300க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66,400க்கு விற்பனையாகி விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். அதே நேரத்தில் ஒரே நாளில் 2 முறை பவுனுக்கு ரூ.1440 உயர்ந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
The post தங்கம் ஒரே நாளில் 2 முறை உயர்வு: பவுன் ரூ.66,400க்கு விற்பனையாகி புதிய உச்சம் appeared first on Dinakaran.