தர்மபுரி, மார்ச் 14: பென்னாகரம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (50), விவசாயி. இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம், பூந்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை எதிர்பாராத விதமாக அவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சின்னசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்னசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பென்னாகரத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி appeared first on Dinakaran.
