×

தங்கம் விலையில் புதிய உச்சம் பவுன் ரூ.65,000ஐ நெருங்கியது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை கண்டது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்ந்தது. தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிரடி உயர்வை சந்தித்து வந்தது. தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி ஒரு பவுன் ரூ.64,600க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் (12ம் தேதி) தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,520க்கு விற்றது.

இந்த விலை உயர்வை தாங்குவதற்குள், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120க்கும், பவுனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,960க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையையும் அடைந்தது. இது, நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

The post தங்கம் விலையில் புதிய உச்சம் பவுன் ரூ.65,000ஐ நெருங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED ஜன.11: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!