×

மாவட்ட சுற்றுச்சுழல் விழிப்புணர்வு போட்டி இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம்

 

ஜெயங்கொண்டம், மார்ச் 13: அரியலூர் அஸ்தினாபுரம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் அகல்யா, தமிழ்நாடு முதலமைச்சர் பசுமை தோழர் மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து கண்காட்சியை பார்வையிட்டனர். கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் பேசினார்.

காளான் வளர்ப்பு, ஆற்றல் சேமிப்பு, அளவீடுகள், தினை போன்ற ஆரோக்கிய உணவுகள், மறுசுழற்சி முக்கியத்துவம், கழிவிலிருந்து செல்வம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மாற்று, தோட்டக்கலையில் நீர் பாதுகாப்பு, மாசுபாட்டை எதிர்த்தல், பசுமை வாழ்க்கை, உணர்திறன், காலநிலை மாற்ற தாக்கங்களின் தனிப்பு நடவடிக்கைகள், போன்ற தலைப்புகளில்போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 60 பள்ளிகளில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய படைப்பு திறன்களை வெளி காட்டி இருந்தனர்.

இந்த படைப்புகளில் அரியலூர் ஒன்றியம் இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடமும், பொய்யூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்று பரிசு தொகையாக முறையே ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம், மற்றும் ரூ.7 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

மேலும், தா.பழூர் ஒன்றியம் மனகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அஸ்தினாபுரம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5000 காசோலை வழங்கப்பட்டது. மேலும் இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ரூ.1,000 பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அஸ்தினாபுரம் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் காசி வரவேற்றார். முடிவில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி நன்றி கூறினார்.

 

The post மாவட்ட சுற்றுச்சுழல் விழிப்புணர்வு போட்டி இலுப்பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : District Environmental Awareness Competition ,Iluppaiyur Panchayat Union Middle School ,Jayankondam ,Ariyalur Astinapuram Government Model Higher Secondary School ,District Environmental Engineer ,Murali ,Headmaster ,Velmurugan ,District Environmental Executive Engineer ,Akalya ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...